என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரெயில்வே தண்டவாளம்
நீங்கள் தேடியது "ரெயில்வே தண்டவாளம்"
தருமபுரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை கட்டு செக்காரப்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவரது உடல் சிதைந்து கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெண்ணின் உடல்கள் சிதைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தருமபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் பச்சை கலரில் புடவையும், ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்காக ரெயில் முன் பாய்ந்து இறந்தாரா? அல்லது யாராவது கற்பழித்து தண்டவாளத்தில் வீசி சென்றதால் ரெயிலில் அடிப்பட்டு உடல் சிதைந்து கிடக்கின்றனவா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.சி. சர்ச் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் இறந்தவரை பார்த்ததும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாதவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
கொரடாச்சேரி அருகே ஒளிமதி என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகில் சம்பவத்தன்று தலையில் காயத்துடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து கொரடாச்சேரி ரெயில் நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சாவூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் காந்தி சடலத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்தவர் கருப்பு நிற வேட்டி, ஊதா நிற பனியனும் அணிந்துள்ளார். இறந்தவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இறந்தவர் யார்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ரெயில்வே தண்டவாளங்களை வாகன போக்குவரத்துக்காக அம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். #Rajasthan
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ரெயில்வே தண்டவாளங்களில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலே இந்த ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆபத்தான பயணத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர். #Rajasthan

மேலும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ரெயில்வே தண்டவாளங்களில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலே இந்த ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆபத்தான பயணத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர். #Rajasthan
×

X